நானா கோபப்பட்டேன் இல்லவே இல்லை அவன் கோபப்படுத்தி விட்டான்........ என்று தான் சொல்வோம்.
ஆழ்ந்து பார்த்தால் அந்த கோபத்தினால் நாம் எந்த அளவிற்கு மன அழுத்தம் அடைந்தோம் அதனை மறக்க என்னவெல்லாம் கஷ்டப்பட்டோம் என்பது கூட மறக்கும் அளவிற்கு யோசித்து இருப்போம். ஆனால், கடைசிவரை நாம் ஏன் கோபப்பட்டோம் என்று தெரிய வாய்ப்பே இல்லை.
கோபம் 😡 என்ற கொடிய அரக்கனை கொல்ல அன்பு 💛என்ற ஒற்றை ஆயுதத்தை மனதில் ஏற்றினால் அல்லும் பகலும் மனம் ஆனந்தம் அடையும்.
எனது நண்பர் ஒருவர் ஒரு முறை அவர் வழக்கமாக செல்லும் கடைக்கு ஜன்னல் பார்க்க சென்றார். அந்தக் கடையின் உரிமையாளரோ மிகவும் அவருக்கு பழக்கப்பட்டவர் அவரது உபசரணை அப்படி இருக்கும் அப்போது பார்த்து ஒரு நபர் ஜன்னல் பார்க்க அவரது கடைக்கு வாடிக்கையாளராக வந்தார். அந்த நபர் உரிமையாளரிடம் அண்ணே எனக்கு ஜன்னலோட அளவு தெரியாது என் கூட வந்தீங்கன்னா ஜன்னல்-ன் அளவை அளந்துட்டு வந்துரலாம் அப்புறம் தேவையான அளவு உங்களிடம் வாங்கிக்கிறேன் சொல்ல அப்போது அவரோ அண்ணா நீங்க கொஞ்சம் போயிட்டு வந்துறீங்களா-ன்னு கேட்க நம்ம அண்ணனுக்கும் மனம் கேட்காமல் சரி என்று கிளம்ப - இருவரும் இரு வண்டியில் செல்ல, செல்லும் வழியில் செல்போனில் அந்த நபர் இன்னொரு நபரிடம் வீட்ட ஜன்னல அளக்க ஆள் கூப்பிட்டு வரேன் சொல்ல ( புதியதாக கட்டிக் கொண்டிருக்கும் வீடு அல்லவா ) திடீரென்று வண்டியை நிப்பாட்டி அண்ணே மொபைல் தாங்கன்னு வேறொரு நபருக்கு கால் செய்யணும் சொல்லி வாங்கிட்டு கூடவே ஒரு பதினைந்தாயிரம் ரூபாய் கொடுங்க நான் வீட்டுக்கு வந்து அளந்து முடித்த கையோட உங்க கிட்ட கொடுத்துடறேன் அப்படின்னு சொல்லி கேட்க நம்ம அண்ணனும் கொடுத்துட்டாரு கடைசியா பார்த்தா பணத்தை வாங்கி கொஞ்சம் நொடியிலேயே போன் மற்றும் பணத்தோடு வண்டியை தூக்கிட்டு கிளம்பிட்டானாம்.
அண்ணே உடனே கடமையின் உரிமையாளருக்கு கால் செய்து விஷயத்தை சொல்லிவிட்டு அருகில் இருந்த கடையில் உட்கார்ந்தாராம் அண்ணனும் எந்தவித கோபமும் இன்றி அருகில் இருந்த ஹோட்டலில் சாப்பிட்டுக் கொண்டு இருந்தாராம் எப்படின்னு பாருங்க ?
அவருக்கு பணமும் செல்போனும் இழப்பு இந்த சமயத்தில் கூட உணர்ச்சிவசப்பட்டு நாடி நரம்பு எல்லாம் புடைக்க கோவம் கொள்ளாமல் அவனுக்கு என்ன கஷ்டமோ திருடிட்டு போய்ட்டான் விடுங்களேன் போவோம் அப்படின்னு கடையின் உரிமையாளரிடம் சொல்லியுள்ளாராம்.
இப்படி எத்தனை பேர் எவ்வளவோ பெரிய விஷயம் நடந்தாலும் கோபம்னா என்னன்னு கேட்பாங்க அண்ணனைப் போல் அன்பால் அனைத்தையும் சாதிக்கலாம்னு நினைப்பாங்க.
அவர்கள் வழி சென்று நானும் - நாமும் கோபம் கொள்ளாமல் நமது உடலையும் மனதையும் பாதுகாப்போம்.
/// நன்றி ///
ஈஸ்வரன் சு பெ
சிவகாசி
Comments