கோபம்

கோபம் என்ற சொல்லையே அகராதியில் இருந்து நீக்க வேண்டும்.               இங்கு எத்தனை கோபக்காரர்கள் இருக்கிறார்கள், நான் உட்பட அவர்கள் அனைவரும் தெரிந்தா கோபப்படுகிறார்கள் இல்லை கோபப்படுத்தப்படுகிறார்களா என்பது அனைவருக்குள்ளும் எழும் கேள்வி. அதற்கு பதில் தெரியவில்லை ?  நானா கோபப்பட்டேன் இல்லவே இல்லை அவன் கோபப்படுத்தி விட்டான்........ என்று தான் சொல்வோம்.  ஆழ்ந்து பார்த்தால் அந்த கோபத்தினால்  நாம் எந்த அளவிற்கு மன அழுத்தம் அடைந்தோம் அதனை மறக்க என்னவெல்லாம் கஷ்டப்பட்டோம் என்பது கூட மறக்கும் அளவிற்கு யோசித்து இருப்போம். ஆனால், கடைசிவரை நாம் ஏன் கோபப்பட்டோம் என்று தெரிய வாய்ப்பே இல்லை.   கோபம் 😡 என்ற கொடிய அரக்கனை கொ ல்ல  அன்பு  💛என்ற ஒற்றை ஆயுதத்தை மனதில் ஏற்றினால் அல்லும் பகலும் மனம் ஆனந்தம் அடையும்.  எனது நண்பர் ஒருவர் ஒரு முறை அவர் வழக்கமாக செல்லும் கடைக்கு ஜன்னல் பார்க்க சென்றார். அந்தக் கடையின் உரிமையாளரோ  மிகவும் அவருக்கு பழக்கப்பட்டவர் அவரது உபசரணை  அப்படி இருக்கும் அப்போது பார்த்து ஒரு நபர்...

எது பக்தி

 எது பக்தி ?

விரதம் என்னும் பெயரில் ஏதாவது ஒரு வேளை மட்டும் இலை போட்டு அன்றைய பொழுதின் விரதத்தை முடித்து மற்றொரு வேளை இட்லி தோசை போன்ற டிபனை சாப்பிட்டு மூன்றாவது ஒருவேளை சாப்பிடாமல் பட்டினி கிடந்து ஒரு வாரமோ ஒரு மாதமோ ஒரு மண்டலமோ பய பக்தியாய் குளித்து முடித்து நெற்றியில் சந்தனம்,குங்குமம்,விபூதி இட்டு நாம் விரதம் இருந்த அந்த பகவானை நோக்கி  கிளம்பி 30 நிமிடம் கூட பொது தரிசனத்தில் நின்று சாமி கும்பிட நேரமில்லாமல் வேகவேகமாய் சென்று ஐந்து நிமிடம் சிறப்பு தரிசனம் கண்டு கோவிலை விட்டு வெளியே வந்த அடுத்த நொடியே பழைய நிலைக்கு திரும்புவது பக்தியா ....

திருவிழாவில் சொந்த பந்தம் எல்லாம் கூடும் திருவிழாவில் நம் பண பலத்தை காண்பிக்க  விலை உயர்ந்த மாலை, பூஜை சாமான்கள் போன்றவை கொண்டு சென்று சாமியை தரிசிப்பது பக்தியா ....

நாங்க இப்படித்தான் சாமி கும்பிடுவோம் நீயும் இப்படித்தான் கும்பிடணும். இது இதெல்லாம் வைக்கணும். இத்தனை மணிக்குள்ள கும்பிடணும் இதெல்லாம் நம்ம கூடவே இருக்கிற ஒரு ஆள் சொல்லும்போது உங்களோட மனநிலையில் உண்மையில் அவர் பக்தியின் அடிப்படையில் சொல்கிறாரா தன் பெருந்தன்மையை காமிக்க சொல்கிறாரா என்று தோன்றுமா ? இல்லையா ? இதுவும் பக்தியா ....

ஒரு கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய டூவீலரிலோ காரிலோ பேருந்திலோ பயணம் செய்யும் பொழுது எதிர்பாராதவிதமாக ஏற்படும் விபத்திற்கு காரணம் அவன் வைத்த பக்தியா ....

என்னைப்பொருத்தவரை பக்தி என்பது நமக்கு என்ன தேவையோ அதை கண்ணுக்குத் தெரியாத ஒரு சக்தியிடம் இருந்து கேட்டுப் பெறுவது நம்மைச் சுற்றிலும் பலவிதமான பாசிட்டிவ் வைப்ரேஷன் உள்ளது அந்த வைப்ரேஷன் பன்மடங்காகப் பெருகி நமக்கு என்ன தேவையோ அதைக் கேட்டுப் பெற வேண்டும்.

"நீ என்ன நினைக்கிறாயோ, அதுவாகவே மாறுகிறாய்"

அவர் மேல் அவரவர் வைக்கும் நம்பிக்கையே உண்மையான பக்தி.

(குறிப்பு:- மேலே கூறியவை சாதாரணமாக நம் வாழ்க்கையில் நடக்கக்கூடிய நான்கு எடுத்துக்காட்டுகள் மட்டுமே இதைப்போல பல இருக்கிறது.)



Comments